0

 புதிதாக TET தேர்வு கிடையாது - ஏற்கனவே TET தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

"காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்" - அமைச்சர் பாண்டியராஜன்.


💵  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சென்னையில் இன்று (11.01.2017) நிருபர்களிடம் கூறியதாவது


💵   தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


💵  ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணியிடங்களில் அமர்த்தப்பட உள்ளனர்.


💵   எனவே புதிதாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேவையில்லை.


💵   மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும்.


💵  மாணவர்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வருவதில் தவறில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source:
http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/11121012/1061469/Will-be-filled-vacant-teaching-posts-Minister-Pandiarajan.vpf

Post a Comment

 
Top